

சென்னையில் டிசம்பர் 9-ம் தேதி (வியாழக்கிழமை) தாம்பரம், சோழிங்கநல்லூர், பொன்னேரி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின் வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"சென்னையில் 9.12.2021 அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மாலை 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின்சாரம் விநியோகிக்கப்படும்.
தாம்பரம் பகுதியில் கிருஷ்ணா நகர் ஆஞ்சநேயர் கோயில் தெரு, காலமேகம் தெரு, அகத்தியர் தெரு, நால்வர் தெரு, மோகன் தெரு, பரத்வாஜர் தெரு, கம்பர் தெரு, போரூர் தெரு, மணிமேகலை தெரு, சக்கரவர்த்தி தெரு, கற்பக விநாயகர் தெரு, கோவிலம்பாக்கம் ஷோபா, 200 அடி ரேடியல் தெரு, கிருஷ்ணா நகர், மணிமேகலை நகர், காகிதபுரம், பம்மல் அண்ணா சாலை, எம்.ஜி.ஆர் தெரு, ஆதாம் தெரு, நாகல்கேணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
சோழிங்கநல்லூர் பகுதியில் செம்மஞ்சேரி மெஜஸ்டிக் குடியிருப்பு, ஓ.எம்.ஆர் பகுதி, ஜவஹர் நகர், எழில் முக பாலதோட்டச் சாலை.
பொன்னேரி பகுதியில் திருவாய்கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர்.கண்டிகை, கண்ணக்கோட்டை, சின்னபுலியூர், பெரியபுலியூர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்."
இப்பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.