கட்டணமில்லா வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா | கோப்புப் படம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா | கோப்புப் படம்.
Updated on
1 min read

கட்டணமில்லா வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசின் அறிவிப்புக்குத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழக அரசு கட்டணமில்லா வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்குக் கடந்த 2021 அக்டோபர் மாதம் வரை காலம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இக்கால நிர்ணயத்தை 2022 மார்ச் 31 வரை நீட்டித்துத் தரவேண்டி 12-10-2021 அன்று தமிழக முதல்வர் மற்றும் வணிகவரித்துறை அமைச்சருக்குக் கோரிக்கை மனு அளித்திருந்தது.

பேரமைப்பின் கோரிக்கை ஏற்கப்பட்டு, 2022 மார்ச் 31 வரை கட்டணமில்லா வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இந்தக் கால நீட்டிப்பு அடித்தட்டு வணிகர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசின் இவ்வறிவுப்புக்குத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்."

இவ்வாறு கோவிந்தராஜுலு குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in