டிச 8-ம் தேதி சென்னையில் எங்கெங்கு ஒரு நாள் மின் தடை?: மின் வாரியம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை கிண்டி பகுதியில் டிசம்பர் 8-ம் தேதி புதன்கிழமை அன்று ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"சென்னையில் 08.12.2021 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கிண்டி பகுதியில் : ஆலந்தூர் எம்.கே.என் ரோடு, ஆலந்தூர் மெயின் ரோடு, ரயில் நிலையம் ரோடு, ஜி.எஸ்.டி, ரோடு, மதுரை தெரு, வேளச்சேரி ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, குப்புசாமி காலனி, ஆதம்பாக்கம் அலுவலர் காலனி, ஏரிக்கரை மற்றும் ஆதம்பாக்கம் பகுதி, என்.ஜி.ஓ. காலனி, எஸ்.பி.ஐ. காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்" குறிபிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in