

டிசம்.6-ம் தேதி சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று கட்சி பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படும். எனவே, தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்."
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.