

டிசம்பர் 6-ல் இருந்து திருச்சி - சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் நேரங்கள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"ரயில் எண். 16796 திருச்சி - சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் திண்டிவனம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் 06 டிசம்பர் 2021 முதல் வருகை மற்றும் புறப்பாடு நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி திண்டிவனத்தில் மதியம் 03.16 மணிக்கு வந்து 03.18 மணி அளவில் புறப்படும் ரயில், 6ம் தேதி முதல் 03.13 மணி அளவில் வந்து 03.15 மணி அளவில் புறப்படும்.
இதேபோல் செங்கல்பட்டில் மதியம் 04.16 மணிக்கு வந்து 04.18 மணி அளவில் புறப்படும் ரயில், 6ம் தேதி முதல் 04.08 மணிக்கு வந்து 04.10 மணி அளவில் புறப்படும்.
இதேபோல் தாம்பரத்தில் மதியம் 04.43 மணி அளவில் வரும் ரயில் 04.45 மணி அளவில் புறப்படும், 6ம் தேதி முதல் மதியம் 04.38 மணிக்கு வரும் ரயில் 04.40 மணி அளவில் புறப்படும்.
இதனிடையே, விழுப்புரம் , மேல்மருவத்தூர் மற்றும் சென்னை எழும்பூர் பகுதியில் வழக்கமான நேரத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை இயக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.