

தமிழகத்தில் இன்று சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நடப்பாண்டு தமிழகம் முழுவதும் அதிகப்படியான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. குறிப்பாக இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்குக் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.