

சென்னையில் பணியாற்றிய முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை தீர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றவுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
"சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை தீர்க்கும் கூட்டத்தினை சென்னை மாவட்ட ஆட்சியர் 16.12.2021 வியாழக்கிழமை அன்று காலை 11 அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 8-ஆம் தளக் கூட்ட அரங்கில் நடத்த உள்ளார்.
எனவே சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அரசு அலுவலர்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் ஏதும் இருப்பின் சுருக்கமாக இரட்டை பிரதிகளில், விண்ணப்பமாக, மாவட்ட ஆட்சித் தலைவர் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் 62, ராஜாஜி சாலை சென்னை- 600 001. என்ற முகவரிக்கு 30.11.2021 தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது".
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.