அவிநாசி அருகே அரசு  பேருந்து கவிழ்ந்து விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்

அவிநாசி அருகே அரசு  பேருந்து கவிழ்ந்து விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்

Published on

அவிநாசி அருகே எம். நாதம்பாளையத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 க்கும் மேற்பட்டோர் இன்று ( புதன்கிழமை) அதிகாலை படுகாயமடைந்தனர்.

பெங்களூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது.

கோவை-சேலம் ஆறு வழிச்சாலை அவிநாசி நாதம்பாளையம் பிரிவு அருகே வரும்போது சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in