

நவம்பர் 25-ம் தேதி அன்று பராமரிப்பு பணி காரணமாக சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் ஒரு நாள் மின் தடையை தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
"சென்னையில் 25.11.2021 தேதி வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும்.
சோழிங்கநல்லூர் பகுதியில் ; தேவராஜ் நகர், பூபதி நகர், அண்ணா தெரு, வில்லேஜ் நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர் பகுதி, ஒக்கியம் துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, ஸ்டேட் வங்கி காலனி, எல்லையம்மன் கோயில் தெரு, ரிங்ரோடு பகுதி, அஞ்சல் அலுவலகம், எம்.சி.என் நகர் விரிவு, ஒ.எம்.ஆர் பகுதி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்."
இவ்வாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.