

சென்னையில் நவ.24-ம் தேதி அன்று மின் விநியோகப் பராமரிப்புப் பணி காரணமாக குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு நாள் மின் தடையைத் தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"சென்னையில் 24.11.2021 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அதன்படி, தாம்பரம் பகுதியில் பெருமாள் கோயில் தெரு, திருச்செந்தூர் நகர், திருத்தணி நகர், பல்லவ கார்டன், பெருமாள் நகர் பகுதி, 200 அடி துரைப்பாக்கம் ரோடு, ஆழகப்பா நகர், ஏ.ஆர்.ஜி நகர், ராணுவக் குடியிருப்பு, பிபிசிஎல், எல் & டி மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சோழிங்கநல்லூர் பகுதியில் தேவராஜ் நகர், பூபதி நகர், அண்ணா தெரு, வில்லேஜ் நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர் பகுதி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பொன்னேரி துரைநல்லூர் பகுதியில் கவரப்பேட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேதூர், பழவேற்காடு, திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் உள்ளிட்ட இடங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்."
இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.