

புருலியா விரைவு ரயில் இன்ஜின் பழுதால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நிறுத்தப்பட்டது.
விழுப்புரத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் புருலியாவுக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது, இந்த ரயில் இன்று பிற்பகல் 12.15க்கு புறப்பட்டு நாளை இரவு 10 20க்கு புருலியா சென்றடையும்.
வழக்கம்போல இன்று பிற்பகல் 12.15க்கு புறப்பட்ட ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுப்புரம் அருகே வெங்கடேசபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
பின்னர் மாற்று இன்ஜின் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டு சுமார் 70 நிமிடங்களுக்கு பின் புறப்பட்டுச் சென்றது