தொடர் மழை: எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு? 

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தொடர் கனமழை காரணமாகத் தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. விடாது பெய்யும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களின் உள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in