

கருக்கலைப்பு செய்தால் மரண தண்டனை விதித்து ஈரான் உத்தரவிட்டுள்ளதற்கு ஐ.நா. மனித உரிமைகள் நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈரான் அரசு பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்த, கருக்கலைப்பு செய்துகொள்ள, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள தடை விதித்துள்ளது. இது பெண்களின் உரிமைக்கு எதிரானது. கருக்கலைப்பு செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஒருவேளை கருவில் இருக்கும் குழந்தையால் தாய்க்கு ஆபத்து என்றால் மட்டுமே அதை அனுமதிக்கலாம் எனக் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. உரிமைகள் குழு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், இந்தச் சட்டம் தனிநபரின் உயிரி வாழும் உரிமைக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளது.