

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகை தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''துணிவுடன் அறம் காக்கப் போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாள் இன்று. உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன. நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகை தின வாழ்த்துகள்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.