

சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை பெருநகரம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு மாம்பலம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது பாதிப்பு நிலவரம் குறித்துப் பகுதி மக்களிடம் நேரடியாகக் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜேசிடி பிரபாகர், வி.என்.ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.