சென்னையில் மழை பாதிப்பு: 3-வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆய்வு; நிவாரண உதவிகள் வழங்கினார்

சென்னையில் மழை பாதிப்பு: 3-வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆய்வு; நிவாரண உதவிகள் வழங்கினார்
Updated on
1 min read

சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 3-வது நாளாக ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சென்னையில் மழை பாதித்த பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட கோவிலம்பாக்கம், காரப்பாக்கம், கொட்டிவாக்கம் ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதி மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். தொடர்ந்து பள்ளிக்கரணை - நாராயணபுரம் ஏரியையும் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in