

குண்டேரிபள்ளம் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள குண்டேரிபள்ளம் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
மல்லிதுர்கம், கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குண்டேரிபள்ளம் முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து 1,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் கொங்கர்பாளையம், ராணிப்புதூர், மூதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.