

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகளை காங்கிரஸார் வழங்கினர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரியின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. காலை 11 மணியளவில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் 70 கிலோ எடையுள்ள பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் டாக்டர் ஏ.செல்லக்குமார், எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்டோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.