

தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை (ஞாயிறு) கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, ஈரோடு , பெரம்பலூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுவை, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யும்
பலத்த காற்று வீசும் என்பதால் மன்னார் வளைகுடா, குமரிக் குடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.