

ஆண், பெண் என்ற பாகுபாடு நீங்க வேண்டும். சமவாய்ப்பு ஓங்க வேண்டும் என்று சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும் தனது கருத்தைப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆணுக்குத் தனி, பெண்ணுக்குத் தனி என்றே இங்கு உலகு சமைக்கப்படுகிறது. இல்லத்தில் தொடங்கி இணையம் வரைக்கும் இப்பாகுபாடு நீடிக்கிறது. இந்நிலை மாற வேண்டும். சமவாய்ப்பு ஓங்க வேண்டும். சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தில் ஒரு அப்பாவின் மன்றாடல் இது” என்று பதிவிட்டுள்ளார்.