

2022ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் எனது மகள் போட்டியிடுவார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட் தெரிவித்துள்ளார்.
வரும் 2022ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட், தீவிர அரசியலில் இருந்தே முழுமையாக விலகப்போவதாக சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார். தற்போது தனக்கு பதிலாக தனது மகள் 2022ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் இது தொடர்பாக ரோட்ரிகோவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளிக்கும்போது, “அதிபர் தேர்தலில் எனது மகள் போட்டியிடுவார். அவர் எப்போது வேட்புமனுத் தாக்கல் செய்வார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அதிகமாக அரசியல் குறித்துப் பேசியது இல்லை” என்று தெரிவித்தார்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ரோட்ரிகோ கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். போதைப் பொருள் கடத்துபவர்களைச் சுடவும் உத்தரவிட்டார். இதானால் மனித உரிமை அமைப்புகள் அவருக்கு எதிராகத் தொடர் எதிர்ப்புக் குரல்களை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாக ரோட்ரிகோ அறிவித்துள்ளார்.