

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் தரப்பில், “ தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக் கூடும்.
தென்மேற்கு பருவ காற்று காரணமாக தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருது நகர், நெல்லை, கன்னியாக்குமரி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு.
நாளை தேனி, திண்டுக்கல்லில் மழைக்கு வாய்ப்பு. சென்னையைப் பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்பு.
மேலும், வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் கோபால்பூருக்கும், கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே இன்று கரையை கடக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.