பாகிஸ்தானுடனான கிரிக்கெட் ரத்து; முடிவை ஆதரிக்கிறேன்: நியூசிலாந்து பிரதமர்

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் ரத்து; முடிவை ஆதரிக்கிறேன்: நியூசிலாந்து பிரதமர்
Updated on
1 min read

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியை ரத்து செய்த முடிவை முழுமையாக ஆதரிப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக திடீரென ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ராவல் பிண்டியில் முதல் ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற இருந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நியூசிலாந்து அரசு எச்சரிக்கை செய்ததையடுத்து தொடர் ரத்து செய்யப்பட்டது.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைப் பெரும் சிக்கலில் விட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கண்டனமும் தெரிவித்தனர்.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறும்போது, “நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டதற்காக பாகிஸ்தான் பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விளையாட்டு நடைபெறாமல் போனது எவ்வளவு ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால், நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு எடுத்த முடிவை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். வீரர்களின் பாதுகாப்பே முக்கியம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in