எஸ்.ஐ.யைத் தரக்குறைவாகப் பேசிய தனிப்பிரிவு தலைமைக் காவலர் சஸ்பெண்ட்

தலைமைக் காவலர் மயில்வாகனன்
தலைமைக் காவலர் மயில்வாகனன்
Updated on
1 min read

கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே மணல் கடத்தல் குறித்துத் தகவல் அளித்தவரிடம் எஸ்.ஐ.யைத் தரக்குறைவாகப் பேசிய பாலவிடுதி தனிப்பிரிவு தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல்நிலையத் தனிப்பிரிவுத் தலைமைக் காவலர் மயில்வாகனன். இந்நிலையில் மாவத்தூர் பகுதியில் திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுவதாகச் சின்னாம்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி, தனிப்பிரிவு தலைமைக் காவலர் மயில்வாகனனுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது மயில்வாகனன், உதவி ஆய்வாளரைப் பற்றித் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதையடுத்து கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் பாலவிடுதி தனிப்பிரிவு தலைமைக் காவலர் மயில்வாகனனைப் பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in