சீனாவில் மீண்டும் கரோனா: ஃபுஜியான் மாகாணத்தில் டெல்டா வைரஸ் பாதிப்பு

சீனாவில் மீண்டும் கரோனா: ஃபுஜியான் மாகாணத்தில் டெல்டா வைரஸ் பாதிப்பு
Updated on
1 min read

சீனாவின் தென்கிழக்கு மாகாணமான ஃபுஜியானில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிசிடிவி தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், “ சீனாவின் ஃபுஜியான் மாகாணத்திலுள்ள புடியான் நகரில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 10 முதல் 12 வரையில் புட்டியானில் 43 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள், உடற்பயிற்சி நிலையங்கள், சினிமா ஹால்கள் மூடப்பட்டன.

முக்கிய தேசிய சாலைகளும் ஃபுஜியானிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. ஃபுஜியான்வாசிகள் சிலர் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் ஜியாங்சு பகுதியில் கரோனா அதிகரித்து தற்போதுதான் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் கரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் 5.66 பில்லியன் மக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in