

இந்தோனேசியாவில் சிறை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 கைதிகள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவுக்கு புறவெளியில் அமைந்துள்ள டேன்ஜிரங் சிறையில் புதன்கிழமையன்று மோசமான தீ விபத்து ஏற்பட்டது.
நெரிசலான இந்த சிறையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 41 சிறைக் கைதிகள் பலியாகினர். 80 பேர் வரை காயமடைந்தனர். பலியானவர்களில் இரண்டு பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தாக இது கருதப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா குறைந்தது
இந்தோனேசியாவில் ஜூலை மாதம் கரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது தொற்று விகிதம் குறைந்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தளங்களும் திறக்கப்பட உள்ளன.