

பாராலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்கள் வென்ற மணிஷ் நார்வால், சிங்ராஜ் அதானா ஆகியோருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்..
டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் மணிஷ் நார்வால் தங்கப் பதக்கத்தை வென்றார். சிங்ராஜ் அதானா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாரா ஒலிம்பிக்ஸ் பதக்கப் பட்டியலில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். மணிஷ் நார்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்ராஜ் அதானா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை. சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.