வாடகை பிரச்சினை: உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வியாபாரிகள் கைது

வாடகை பிரச்சினை: உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வியாபாரிகள் கைது

Published on

உதகை நகராட்சி மார்க்கெட் கடைகள் வாடகை பாக்கி பிரச்சினை தொடர்பாக, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வியாபாரிகள் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக் கடைகள் வாடகை பிரச்சினை தொடர்பாக 8-ம் நாளாக இன்றும் மார்க்கெட் கடைகள் திறக்கப்படவில்லை. சீல் நடவடிக்கைக்கு எதிராக வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சாலை மறியல், ஆர்ப்பாட்டம் எனப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

வியாபாரிகள் கைது

இந்நிலையில், இன்று காலை மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த அப்துல் சமது தலைமையில், மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜா முகமது, செயலாளர் குணசேகர், வியாபாரிகள் பலர் நகராட்சி மார்க்கெட் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்த முற்பட்டனர். ஆனால், அதற்கு அனுமதி இல்லாததால் போலீஸார் கைது நடவடிக்கையில் இறங்கினர். இந்த முற்றுகை முயற்சியில் பெண்கள் உட்பட வியாபாரிகள் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in