பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்

இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற 14 வயதுச் சிறுவன் விபத்தில் பலி

Published on

தருமபுரி மாவட்டம் அரியகுளம் பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற 14 வயதுச் சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியில் வசிப்பவர் சரசு (40). இவர் கணவர் முருகேசன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். சரசு, தமிழக காவல் துறையில் தருமபுரி மாவட்டத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி அண்மையில் பதவி உயர்வு பெற்றார். இதற்கான பயிற்சிக்குச் செல்ல இருந்தார்.

இந்நிலையில் நேற்று (ஆக. 30) இரவு சொந்த வேலையாக கிருஷ்ணாபுரம் சென்றுவிட்டு தருமபுரி திரும்பியுள்ளார். இருசக்கர வாகனத்தை சரசுவின் மகன் அருணேஷ் (14) ஓட்டிச் செல்ல, சரசு பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அரியகுளம் பகுதியில் சென்றபோது, எதிரில் வந்த அரசுப் பேருந்தை முந்திச் செல்ல அதன் பின்னால் வந்த சரக்கு வாகன ஓட்டுநர் முயற்சி செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனம், சிறுவன் அருணேஷ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சிறுவன் அருணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சரசு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து பற்றி கிருஷ்ணாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in