

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா இன்று மாநகரப் பேருந்துகளை ஆய்வு செய்தார்.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இருக்கைகள் சரியாக இல்லாதது, மழையின்போது பேருந்தினுள் மழை நீர் கசிவது, போதிய பராமரிப்புகள் இல்லாதது போன்ற பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா இன்று (ஆக.24) காரைக்கால் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் ஏறி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பயணிகளிடம் குறைகள், கோரிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் நெடுங்காடு செல்லும் பேருந்தில் பயணிகளுடன் அமர்ந்து பயணித்தார். தொடர்ந்து காரைக்கால் மதகடி பகுதியில் உள்ள பேருந்துப் பணிமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் சிவானந்தம் உடனிருந்தார்.