பவுர்ணமி வழிபாடு: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

பவுர்ணமி வழிபாடு: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
Updated on
1 min read

பவுர்ணமி வழிபாட்டுக்காக ஆகஸ்ட் 23-ம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள தாணிப்பாறை மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 23-ம் தேதி பவுர்ணமி வழிபாடு நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படைகளிலும் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நடைபெறும் பவுர்ணமி வழிபாட்டில் பங்கேற்க அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள். எனவே கரோனா நோய்த் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கும் வகையில், இம்மாதம் 23-ம் தேதி வரை கோயிலில் தரிசனம் செல்ல பக்தர்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்படுகிறது. ஆனால், கோயிலில் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in