பொம்மை கார்களில் விளையாடும் தலிபான்கள்: வைரலான வீடியோ

பொம்மை கார்களில் விளையாடும் தலிபான்கள்: வைரலான வீடியோ
Updated on
1 min read

காபூலில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பொம்பை மின்சார கார்களில் தலிபான்கள் விளையாடிய காட்சி வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை மையமாக கொண்டு இயங்கும் பத்திரிகையாளர் ஹமித் ஷாலிசி தனது ட்விட்டர் பக்கத்தில் காபூலில் உள்ள பொழுதுப் போக்கு பூங்காவில், பொம்மை மின்சார கார்களில் தலிபான்கள் விளையாடும் காட்சியை பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கான் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில், நாடு முழுவதுக்கும் பொது மன்னிப்பை அறிவித்துள்ளார்கள். மேலும், பெண்களும் புதிய ஆட்சியில் பங்கேற்கலாம் என தலிபான்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in