ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினார் அஷ்ரப் கனி?

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினார் அஷ்ரப் கனி?
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தான் நாட்டிற்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தை தலிபான்களிடம் ஒப்படைக்க அவர் விருப்பம் தெரிவித்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், அதிபரின் நடமாட்டம் குறித்து பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்போதைக்கு ஏதும் தெரிவிக்க முடியாது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

இருப்பினும் அதிபர் வெளியேறியதை டோலோ நியூஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படைகளும், அமெரிக்கப் படைகளும் வெளியேறத் தொடங்கியபின் தலிபான்கள் வேகமாக பல்வேறு மாகாணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களை கைப்பற்றி வந்த தலிபான் தீவிரவாதிகள் இன்று தலைநகர் காபூல் நகருக்குள் கைப்பற்றினர்.

தலிபான்களுக்கும், ஆப்கன் ராணுவத்துக்கும் இடையே நடக்கும் சண்டையில் அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
தலிபான்கள் தரப்பில், "காபூல் நகரில் எந்தப் பகுதியையும் அடக்குமுறையின்மூலம், கட்டாயத்தின் மூலம் எடுக்கமாட்டோம். மக்களின் உயிருக்கும், சொத்துக்களுக்கும், மரியாதைக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. காபூல் நகரில் வசிக்கும் மக்கள் உயிரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தான் நாட்டிற்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in