

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல்ப் கீப்பர் ஸ்ரீஜேஷ்க்கு பிரபல மலையாள நடிகர் மம்முட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து மம்முட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “ கேரளாவின் பெருமை ஸ்ரீஜேஷை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்காக பதக்கத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தினார்.அவருக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றி எல்லாம் அமைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இதன் மூலம் ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பின் இந்திய ஆடவர் ஹாக்கி அணி முதல் முறையாகப் பதக்கம் வென்றது.
முன்னதாக, ஒலிம்பிக்கில் இந்திய அணி 8 தங்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களை வென்றுள்ளது. கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது. அதன்பின் தற்போது வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.