

மக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதாலேயே கரோனா தொற்று ஏற்படுவதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
மக்கள் கூட்டம் கூடுவதால் சில இடங்களில் தொற்று அதிகரிக்கிறது. எனவே மக்கள் அதிகமான எண்ணிக்கையில் கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் பொது இடங்களில் செல்லும்போது மக்கள் மாஸ்க் அணிய வேண்டும். மால் போன்ற இடங்களில் மக்கள் மாஸ்க் அணிகின்றனர்.
மக்களிடம் இன்னமும் விழிப்புணர்வு இல்லை. தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று தெரு தெருவாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியபோதும் சிலர் முன்வருவதில்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கே தொற்று வருகிறது. எனவே மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் நேற்று 1,893 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 25,79,130. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,40,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,24,400 ஆக உள்ளது.