Published : 10 Aug 2021 05:10 PM
Last Updated : 10 Aug 2021 05:10 PM

உலகப் புகழ்பெற்ற சீன யானைக் கூட்டம் சொந்த வசிப்பிடத்தை நெருங்கியது

உலகளவில் புகழ்பெற்ற சீன யானைக் கூட்டமானது தனது இயற்கையான வசிப்பிடத்தை நெருங்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூன் மாதம், 15 யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று தெற்கு சீனாவில் இருக்கும் யுனான் மாகாணத்தில் இருக்கும் அதன் சொந்த வாழ்விடத்திலிருந்து சுமார் 310 மைல்கள் (500 கிலோமீட்டர்கள்) பயணம் செய்து சீனாவின் தென் கிழக்குப் பகுதிகளில் வழியாக உலாவந்தது.

கடந்த ஆண்டே இந்த நீண்ட பயணத்தை அந்த யானைக் கூட்டம் தொடங்கிவிட்டது. வழி நெடுகிலும் குறிப்பாக கடந்த எப்ரல் பிறபாதியிலிருந்து இந்த யானைக் கூட்டமானது 56 ஹெக்டேர் பரப்பளவிலான விளை பொருட்களை சேதப்படுத்துயுள்ளது. கடந்த மாதம் எடுக்கப்பட்ட கணக்கின் படி மொத்தம் 6.8 மில்லியன் யுவான் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும் கூட அந்த யானைக் கூட்டம் சர்வதேச கவனத்தைப் பெற்றது. குறிப்பாக மூன்று குட்டி யானைகளின் சேட்டை அனைவரையும் ஈர்த்தது. அதிலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு, மூன்று யானைகளின் நடுவே அரவணைத்து வைக்கப்பட்டிருக்கும் குட்டி யானை புகைப்படம் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டது. அந்த யானைக் கூட்டம் தான் தற்போது மீண்டும் அதன் இயற்கை வசிப்பிடத்தை நெருங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஞாயிறு இரவு கிடைத்த தகவலின்படி இந்த யானைக்கூட்டம் அதன் இயற்கை வசிப்பிடத்திலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ளது. யுவான்ஜியாங் ஆற்றைக் கடந்து அந்த யானைக் கூட்டம் இயற்கை வசிப்பிடம் நோக்கி நகர்ந்துள்ளது.

இந்த யானைக்கூட்டம் எதற்காக இடம் பெயர்ந்தன என்பது உறுதி செய்யப்படவில்லை. ஆனால், சீனாவின் நார்மல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறும்போது, யானைகளின் இயற்கையான வசிப்பிடத்தில் மேய்ச்சல் இடம் மக்களால் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேய்ச்சல் பரப்பு குறைந்தால் யானைகள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறுவது இயல்பு எனக் கூறினார்.

இந்த யானைக் கூட்டத்தை மீண்டும் அதன் வசிப்பிடத்துக்கே அனுப்பும் முயற்சியில் சீனா வனத்துறையினரை ஈடுப்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x