

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்த தருணம் அடங்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது. தடகள போட்டிகளில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
இந்நிலையில், நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்த தருணம் அடங்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நீரஜ் சோப்ரா கையிலிருந்து ஈட்டி சென்றவுடனேயே நம்பிக்கையுடன் இரண்டு கைகளையும் உயர்த்தி வெற்றியைக் கொண்டாடியுள்ளார்.
வீடியோவைக் காண:
இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு ஈட்டி எறிதல் போட்டி தொடங்கியது. இதில், முதல் வாய்ப்பில் 87.03 மீட்டர் தூரத்துக்கும், இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரமும், மூன்றாவது வாய்ப்பில் 76.79 மீட்டர் தூரமும் ஈட்டியை பாயவிட்டார். நான்காவது முயற்சி தோல்வியில் முடிந்தாலும் கூட அவர் தனது இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தது அவருக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளது.
தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.