'நீ வெறும் கையுடன் திரும்பமாட்டாய் மகனே': பஜ்ரங் புனியாவின் தந்தை நம்பிக்கை

'நீ வெறும் கையுடன் திரும்பமாட்டாய் மகனே': பஜ்ரங் புனியாவின் தந்தை நம்பிக்கை
Updated on
1 min read

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெறும் கையுடன் திரும்பமாட்டார் என அவரது தந்தை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32வது ஒலிம்பிக் திருவிழாவில் ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா 5-12என்ற கணக்கில் அஜர்பைஜானின் ஹாஜி அலியே விடம் தோல்வியடைந்தார். அரை இறுதியில் தோல்வியடைந்த பஜ்ரங் புனியா வெண்கலப் பதக் கத்துக்கான மோதலில் இன்று விளையாடுகிறார்.

இந்நிலையில் அவரது தந்தை பல்வான் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் தனது மகன் வெறும் கையுடன் திரும்ப மாட்டார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

இன்று காலை நான் எனது மகனுடன் பேசினேன். அப்போது அவரிடம், நான் உனது மூன்று போட்டிகளையும் பார்த்தேன். போட்டிகளில் உனது வழக்கமான ஆட்டம் வெளிப்படவில்லை என்று தெரிவித்தார். எதிர்ப்பாட்டம் சரியில்லை என்று கூறினேன்.

எனது மகன் நிச்சயம் தோற்றுப் போக மாட்டார். அவரிடம், நீ வெறும் கையுடன் வரக்கூடாது. இன்று உனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்று கூறியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பஜ்ரங் புனியா இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் செனகல் நாட்டின் அடமா டியட்டா அல்லது கசகஸ்தானின் தவுலத் நியாஸ்பெகோவை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in