

அரியலூர் அருகே செந்துறையில் முந்திரித் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஆக.5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில், அரியலூர் மாவட்டம் செந்துறையில் முந்திரிக்கொட்டை தொழிற்சாலை மற்றும் முந்திரி பழச்சாறு தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
அதேபோல் நிலக்கடலை அதிகம் விளையும் ஜெயங்கொண்டம், தா.பழூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் சுத்தமல்லியில் நிலக்கடலை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசனத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.