

மேகதாது அணை விவகாரத்தில் பாஜக நாடக அரசியலை நடத்துவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் இன்று (ஆக.5) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ’’மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். பாஜக நாடக அரசியலை நடத்துகிறது. மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பதற்கு பதிலாக அக்கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வரிடம் வலியுறுத்தலாம்.
வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் அதற்கெனத் தனி பட்ஜெட் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துகள்’’ என்று திருமாவளவன் தெரிவித்தார்.