மதுரை போக்குவரத்துச் சரகத்தில் முதல் பெண் ஆர்டிஓ பொறுப்பேற்பு

மதுரை போக்குவரத்துச் சரகத்தில் முதல் பெண் ஆர்டிஓ பொறுப்பேற்பு
Updated on
1 min read

மதுரை உட்பட 3 மாவட்டங்கள் அடங்கிய போக்குவரத்துச் சரகத்தில் முதல் பெண் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக சித்ரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் அடங்கிய மதுரை போக்குவரத்துச் சரகங்களில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இதுவரை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களாக ஆண்கள்தான் பணிபுரிந்து வந்துள்ளனர். முதல் பெண் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக ஆர்.சித்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கோவை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முதல் நிலை வாகன ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். பதவி உயர்வில் மதுரை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இல்லாமல், மோட்டார் வாகன ஆய்வாளர்களைக் கொண்டே செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மதுரை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலராக சித்ரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நேர்முக உதவியாளர் நல்லியப்பன், கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in