

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே குடிநீர் கேட்டு மக்கள் இன்று (திங்கட்கிழமை) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமானூர் அடுத்த வைப்பூர் கிராமத்தில் உள்ள இருளர் தெருவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் சரியாகக் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை எனக் கூறி, இருளர் தெரு மக்கள் நேற்று அதே கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் போலீஸார் மற்றும் அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.