

சிவகங்கை மாவட்டத்தில் 8 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தேவகோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மாணிக்கவாசகம் காரைக்குடி வட்டாட்சியராகவும், தேவகோட்டை வட்டாட்சியர் ராஜரத்தினம் சிவகங்கை சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், காரைக்குடி வட்டாட்சியர் அந்தோணிராஜ் தேவகோட்டை வட்டாட்சியராகவும்,
சிவகங்கை சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியர் பஞ்சாபகேசன் காரைக்குடி குடுமைப்பொருள் தனி வட்டாட்சியராகவும், தேவகோட்டை கோட்ட ஆய அலுவலர் சிவசம்போ திருப்பத்தூர் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், காரைக்குடி குடுமைப்பொருள் தனி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் காளையார்கோவில் வட்டாட்சியராகவும், இளையன்குடி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் செந்தில்வேலு, தேவகோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், திருப்பத்தூர் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் பஞ்சவர்ணம் இளையான்குடி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.