சிவகங்கையில் திருநங்கைகள் போராட்டம் எதிரொலி: வீடுகளுக்கேச் சென்று நிவாரணம் வழங்கிய அதிகாரிகள்

காரைக்குடி செஞ்சை பகுதியில் திருநங்கைகளின் வீடுகளுக்கேச் சென்று கரோனா நிவாரணத்தொகை வழங்கிய சமூகநலத்துறை அதிகாரிகள்.
காரைக்குடி செஞ்சை பகுதியில் திருநங்கைகளின் வீடுகளுக்கேச் சென்று கரோனா நிவாரணத்தொகை வழங்கிய சமூகநலத்துறை அதிகாரிகள்.
Updated on
1 min read

சிவகங்கையில் திருநங்கைகள் போராட்டம் செய்ததை அடுத்து, அவர்களது வீடுகளுக்கேச் சென்று சமூக நலத்துறை அதிகாரிகள் நிவாரணம் வழங்கினர்.

திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். அவர்களில் சிலருக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மற்றவர்கள் சமூகநலத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இதையடுத்து இருதினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து உடனடியாக நிவாரணத் தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

நேற்று காரைக்குடி செஞ்சை , கண்ணதாசன் சாலை, ரஸ்தா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகளின் வீடுகளுக்கேச் சென்று சமூக நலத்துறை அதிகாரிகள் நிவாரணத்தொகை வழங்கினர். மேலும் விடுபட்ட திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in