மதுரை ஆலமரத்திற்கு வயது 102: கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பொதுமக்கள் 

மதுரை ஆலமரத்திற்கு வயது 102: கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பொதுமக்கள் 
Updated on
1 min read

மதுரையில் ஆலமரத்திற்கு 102-வது பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடி மக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மதுரை மீனாட்சிபுரம் கண்மாய்கரை பகுதியில் 7க்கும் மேற்பட்ட ஆலமரங்கள் வளர்ந்திருந்த நிலையில் ஒவ்வொரு ஆலமரங்களும் முறையாக பராமரிக்காத நிலையில் 6 மரங்களும் காய்ந்துபோன நிலையில் மீதியுள்ள ஒரே ஒரு ஆலமரமானது நூற்றாண்டை கடந்தும் இருந்துவருகிறது.

நூற்றாண்டு கடந்த ஆலமரத்தை பாதுகாக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆண்டுதோறும் பிறந்தநாள் விழா கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஆலமரத்தின் 102-வது பிறந்தாளை முன்னிட்டு இன்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நீர்நிலை இயக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கேக்வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.



நாட்டு இன மரங்களை பாதுகாக்கும் வகையில் சிறுவர்களுக்கு ஆலமரக்கன்றுகளை வழங்கி அதனை கண்மாய்கரைகளில் நடவைத்தனர்.

மனிதர்களின் ஆயுளை நீட்டிக்க செய்யும் ஆக்சிஜனை வழங்கும் ஆலமரத்திற்கு மனிதர்களை போன்று பிறந்தநாள் கொண்டாடிய மதுரை மக்களின் மனங்களுக்கு பாராட்டுதல்கள் குவிந்துவருகிறது.

மரங்களின் தேவை குறித்து வருங்கால சந்ததியினருக்கு உணர்த்தும் வகையிலும், நாட்டு இன மரங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் இது போன்ற பிறந்தநாள் கொண்டாடியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in