

பிலிப்பைன்ஸில் டெல்டா வைரஸ் காரணமாக தொற்று அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிபர் அலுவலகம் தரப்பில்,” பிலிப்பைன்ஸில் டெல்டா காரணமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தாய்லாந்திலிருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
டெல்டா கரோனா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது.
அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.