மாநில கல்வித் திட்டத்தின் மீது மத்திய அரசு அழுத்தமா? மதுரை எம்.பி. கேள்விக்கு கல்வி அமைச்சர் பதில்

மாநில கல்வித் திட்டத்தின் மீது மத்திய அரசு அழுத்தமா? மதுரை எம்.பி. கேள்விக்கு கல்வி அமைச்சர் பதில்
Updated on
1 min read

மாநிலப் பாடத் திட்டங்கள் மீது அழுத்தம் தரப்படுவதாக எழுந்த புகார் குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பு (என்சிஇஆர்டி) ஓர் கூட்டத்தை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்புகளுடன் (எஸ்சிஇஆர்டி) நடத்தியதாகவும், மாநில அமைப்புகள் அமலாக்க வேண்டிய கல்வித் திட்டத்தில் என்னென்ன சேர்க்க வேண்டும், என்னென்ன நீக்க வேண்டும் என அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகவும், அதற்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன என்றும் செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.

அவரின் கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்புகளுடன் மாநிலக் கல்வித் திட்டம் குறித்து கூட்டம் எதையும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பு நடத்தவில்லை.

மாநிலப் பாடத் திட்டங்கள் மீது அப்படி ஏதும் அழுத்தம் தருகிற வலியுறுத்தல்கள் ஏதும் தரப்படவில்லை என என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது" என்று விளக்கினார்.

இதற்கு, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்புகளின் மீது அத்தகைய திணிப்புகள் எதிர்காலத்திலும் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in