மன அழுத்தத்தைக் குறைக்க ஈஷா சார்பில் 3 நாள் இலவச யோகா வகுப்பு: வீட்டில் இருந்தபடியே பங்கேற்கலாம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கரோனா பெருந்தொற்று பரவி வரும் இந்தச் சவாலான காலத்தில் ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற யோகா வகுப்பு ஆன்லைன் வாயிலாக, ஜூலை 23-ம் தேதி முதல் ஜூலை 25-ம் தேதி வரை இலவசமாக நடைபெற உள்ளது.

காலை 6.30 முதல் 8.30 மணி வரை, மதியம் 11 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை என, 3 வேளைகளில் இவ்வகுப்பு தினமும் 2 மணி நேரம் நடக்கும். பங்கேற்பாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இதில் ஏதேனும் ஒரு நேரத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினரும் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம். இதில், கற்றுக்கொடுக்கப்படும் யோகா பயிற்சிகளை தினமும் செய்து வருவதன் மூலம் முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம், மன அழுத்தம் குறையும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் isha.co/Uyirnokkam என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய உதவி தேவையெனில் 73836 73836 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்யலாம். முன்பதிவு ஜூலை 21-ம் தேதி மதியம் 12 மணியுடன் நிறைவு பெறுகிறது.

நிறைவு நிகழ்ச்சியாக ஜூலை 25-ம் தேதி இரவு 7 மணிக்கு தமிழில், சத்குருவுடன் ஆனந்த சங்கமம் நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறும். இதில், அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in