தலைமைச் செயலகத்தில் உதயநிதி படமா?- ஜெயக்குமார் விமர்சனம்

தலைமைச் செயலகத்தில் உதயநிதி படமா?- ஜெயக்குமார் விமர்சனம்
Updated on
1 min read

தமிழக தலைமைச் செயலகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி படம் வைக்கப்பட்டுள்ளதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் போன்ற தலைவர்கள் படங்களின் பக்கத்தில் உதயநிதி படமும் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து அதிமுக முன்னாள் மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் உதயநிதி படம்... தலைமை செயலகமா? அறிவாலயமா ?” என்று பதிவிட்டுள்ளார்.

இப்பதிவை தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுக, அதிமுக ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in