கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தற்காலிகப் பணியிடங்கள்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தற்காலிகப் பணியிடங்கள்
Updated on
1 min read

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தற்காலிகப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

''கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை, கரோனா தொற்றுக்கான சிறப்பு சிகிச்சை மையமாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகளுக்கு சேவை செய்ய ஆறு மாத காலத்துக்கு தற்காலிகத் தொகுப்பு ஊதிய அடிப்படையில், பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அசல் கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்று, புகைப்படத்துடன் கோவை இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வரை அணுகலாம்.

மருத்துவமனையில், 75 செவிலியர்கள் (மாதம் ரூ.14,000 ஊதியம்), 15 லேப் டெக்னீசியன் (ரூ.15,000), 55 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (ரூ.12,000), எட்டு ரேடியோகிராபர்கள் (ரூ,12,000), எட்டு டயாலிசிஸ் டெக்னீசியன்கள் (ரூ.12,000), 20 இசிஜி டெக்னீசியன்கள் (ரூ.12,000), 10 சி.டி., ஸ்கேன் டெக்னீசியன்கள் (ரூ.12,000), 15 மயக்கவியல் டெக்னீசியன்கள், 6 பார்மசிஸ்ட்டுகள் (ரூ.12,000) நியமிக்கப்பட உள்ளனர்''.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in